ஒரு தொகை கேரளா கஞ்சாவை விநியோகம் செய்து கொண்டிருந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
திட்டமிட்ட குற்றத் தடுப்புப் பிரிவுக்கு கிடைத்த தகவலின்படி நடத்தப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் கூறியுள்ளது.
இதன்போது சந்தேகநபரிடமிருந்து 20 கிலோ கிராம் கேரளா கஞ்சா மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
கொழும்பு 14, நாகலகம்வீதிய பிரதேசத்தைச் சேர்ந்த 30 வயதுடைய ஒருவரே சம்பவத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.

