அநாவசிய பிரசாரங்களினால் சுற்றுலா பயணிகளின் வருகைக்கு பாதிப்பை ஏற்படுத்த வேண்டாம் – அர்ஜூன

229 0

நாட்டின் பாதுகாப்பு வழமைக்கு திரும்பி வரும் நிலையில் வெளிநாட்டவர்களின் வருகையிலும் படிப்படியாக அதிகரிப்பு ஏற்பட்டு வருகின்றது.ஆனால், அரசியல்வாதிகளின் அநாவசியமான பிரசாரங்களினால்  இங்கு வருகைத்தரும் வெளிநாட்டவர்களுக்கு அச்சுறுத்தல் நிலை ஏற்படகிறது.இத்தகைய பிரச்சாரங்களினால்  சுற்றுலா பயணிகளின் வருகையை தடைசெய்ய வேணடாம் என்று போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் அர்ஜூன ரணதுங்க வேண்டக்கோள் விடுத்தார்.

நாட்டின் தற்போதைய நிலைமை தொடர்பில் தனது நிலைப்பாட்டை ஊடகங்களுக்கு  தெளிவுப்படுத்தும் போது இதனை தெரிவித்த அமைச்சர்  ரணதுங்க மேலும் கூறியதாவது;

ஏப்ரல் 21 ஆம் திகதி குண்டுத்தாக்குதல்கள் இடம்பெற்று இரண்டு நாட்கள் நிறைவடைவதற்கு முன்பதாக சகல கட்சிகளுக்கும்  கட்சி தலைவர்களும் ஒற்றுமையாக செயற்பட்டனர்.

ஆனால்  இந்த சம்பவங்களின் பின்னர் தாக்குதல்களை அரசியல் மயமாக்கி விட்டனர். அடுத்த  தேர்தல்களை குறிவைத்தே தற்போதைய அரசியல் நகர்வுகள் இடம்பெற்று வருகின்றன. அதிகாரத்தைக் கைப்பற்றி பதவிகளை  அடைந்துக்கொள்வதே அனைவரதும் நோக்கமாக  காணப்படுகிறது.

நாட்டின் தற்போதைய நிலைமையில்  அதிகாரத்தை கைப்பற்றுவது  முக்கியமான விடயம் இல்லை.பிரச்சினைகளில் இருந்து  நாட்டை மீட்பதற்கு  225 பாராளுமன்ற  உறுப்பினர்களும்  ஒற்றுமையாக செயற்படுவதே அவசியமாகும். மக்களின் எதிர்ப்பார்ப்பும்  இதுவாகவே உள்ளது.ஆனால்  அதனை நிறைவேற்ற எவரும் முன்வருவதில்லை.

சிலரின் இதுபோன்ற செயற்பாடுகளின்  கராணமாகவே இன்று மக்கள் சகல பாராளுமன்ற உறுப்பினர்களையும் திட்டுகின்றனர். உரிய காலத்தில் புதிய அரசாங்கம் தெரிவாகும்.

ஆட்சி மாற்றத்துக்கு அமைவாக ஜனாதிபதி.பிரதமர் பதவிகளிலும்  மாற்றம் ஏற்படும். ஆகவே அதுவரையில், ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்களை தொடரந்து நாட்டில் இடம்பெற்ற  நெரக்கடிகளுக்ளகு தீர்வை பெற்றுக்கொடுப்பது அவசியமாகும். நாட்டின் பொருளாதாரம் உறுதியற்ற நிலையை அடைந்துள்ளது. இதற்கான தீர்வுகளை பெற்றுக்கொள்ளவே அனைவரும் முயற்சிக்க  வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.