பேருவளை பொலிஸ் பிரிவில் நடத்தப்பட்ட சோதனை நடவடிக்கையில் 13 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்றைய நாள் முழுவதும் இந்த சுற்றிவளைப்பு நடத்தப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கூறினார்.
இராணுவம் மற்றும் விமானப் படையினர் இணைந்து சோதனை செய்துள்ளதுடன, சுமார் 630 வீடுகள் சோதனை செய்யப்பட்டுள்ளது.
இதன்போது பாதுகாப்பு படையினரின் உடைகளை ஒத்த உடைகள் மற்றும் வாள்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் மேலதிக விசாரணைக்காக பேருவளை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

