ஹிலாரி கிளிண்டன் 11 புள்ளிகள் முன்னிலை

282 0

201610171045322457_america-president-election-hillary-clinton-11-points-leading_secvpfஅமெரிக்க அதிபர் தேர்தலையொட்டி நடந்த கருத்து வாக்கெடுப்பில் டிரம்பை விட ஹிலாரி கிளிண்டன் 11 புள்ளிகள் முன்னிலை பெற்றுள்ளார்.

வருகிற நவம்பர் 8-ந் தேதி நடைபெறும் அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் ஹிலாரி கிளிண்டனும் குடியரசு கட்சி சார்பில் டொனால்டு டிரம்பும் போட்டியிடுகின்றனர். தேர்தல் நெருங்குவதால் பிரசாரம் அனல் பிடிக்கிறது.

சர்ச்சைக்குரியவர் என்ற குற்றச்சாட்டு டிரம்ப் மீது உள்ளது. இந்த நிலையில், இவர் மீது ‘செக்ஸ்’ குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. பெண்களை அவமதிப்பவர் என்ற கடுமையான குற்றச்சாட்டும் உள்ளது. தேர்தலில் வெற்றி பெற்று அதிபரானால் ஹிலாரி கிளிண்டனை சிறைக்கு அனுப்புவேன் என்றும், டிரம்ப் கூறினார். இவர் மீது வரி ஏய்ப்பு புகாரும் உள்ளது.

இந்த நிலையில் இறுதி கட்ட நேரடி விவாதம் விரைவில் நடைபெற உள்ளது. அமெரிக்க வாக்காளர்களிடம் இவர்களில் செல்வாக்கு யாருக்கு என அறிய கருத்து வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. என்.பி.சி நியூஸ் நிறுவனமும், ‘தி வால் ஸ்டிரிட் ஜெர்னல்’ நிறுவனமும் இணைந்து 50 மாகாணங்களிலும் இதை நடத்தினர்.

அதல் ஹிலாரி கிளிண்டன் முன்னிலை பெற்றுள்ளார். இவர் டிரம்பை விட 11 புள்ளிகள் கூடுதலாக பெற்று இருக்கிறார். இவர்களுக்கு அடுத்தபடியாக போட்டியிடும் லிபரேசன் கட்சியை சேர்ந்த கேரிஜான் சனுக்கு 7 சதவீதமும், கிரீன் கட்சியை சேர்ந்த ஷில்ஸ் டீனுக்கு 2 சதவீதம் பேரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

சமீபத்திய கருத்து கணிப்பில் 11 புள்ளிகள் கூடுதலாக கிடைத்திருப்பதன் மூலம் ஹிலாரி கிளிண்டனின் வெற்றி உறுதியாகி விட்டதாக கணிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு, கருத்து வாக்கெடுப்பில் இது போன்று யாரும் கூடுதலாக வாக்குகள் பெற்றதில்லை.

கடந்த 2008-ம் ஆண்டு நடந்த அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற பராக் ஒபாமா ஜான் மேக்கனை விட 7 புள்ளிகள் கூடுதலாக பெற்றார்.

2012-ம் ஆண்டு நடந்த தேர்தலில் மிட்ரோமினியை விட 4 புள்ளிகளே அதிகம் பெற்று இருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது ஒபாமாவை விட மிக கூடுதலான வாக்குகள் வித்தியாசத்தில் ஹிலாரி கிளிண்டன் வெற்றி பெறும் வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது.