பிரேசில் சிறைக்குள் பயங்கர மோதல்: 25 பேர் கொடூரமான முறையில் படுகொலை

309 0

201610171028077468_25-inmates-killed-in-brazil-prison-clash_secvpfபிரேசில் நாட்டின் ரோராய்மா மாநிலத்தில் உள்ள சிறைக்குள் இரு கோஷ்டிகளுக்கு இடையில் வெடித்த மோதலில் 25 பேர் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டனர்.பிரேசில் நாட்டின் ரோராய்மா மாநிலத்தில் உள்ள போவா விஸ்ட்டா நகரில் கொடும் குற்றவாளிகளை அடைத்து வைக்கும் அக்ரிகோலா டி மான்ட்டே கிறிஸ்ட்டோ மத்திய சிறைச்சாலை அமைந்துள்ளது.

பிரேசில் தலைநகர் ரியோ டி ஜெனிரோவில் இருந்து சுமார் 3400 கிலோமீட்டர் தூரத்தில் வெனிசுலா நாட்டின் எல்லையோரம் அமைந்துள்ள இந்த சிறையில் நேற்று பார்வையாளர்கள் நேரத்தின்போது, ஒரு பகுதியை விட்டு மற்றொரு பகுதிக்கு கம்பிவேலியை தாண்டி குதித்து வந்த கைதிகள் பயங்கரமான மோதலில் ஈடுபட்டனர்.

கத்திகள், கைத்தடிகள் ஆகியவற்றால் இருதரப்பினரும் சரமாரியாக தாக்கிக் கொண்டனர். சிறையில் அடைக்கப்பட்டுள்ள தங்களது உறவினர்களை சந்திப்பதற்காக பார்வையாளர்களாக வந்திருந்த சுமார் நூறுபேரையும் அவர்கள் சிறைபிடித்தனர்.

இந்த கலவரத்தை கட்டுப்படுத்த சிறப்பு பாதுகாப்பு படையினர் அங்கு வந்து சேர்ந்தனர். மோதலில் ஈடுபட்ட கைதிகள்மீது தடியடி நடத்தியும், கண்ணீர்புகை குண்டுகளை வீசியும் நிலவரத்தை அவர்கள் கட்டுப்படுத்தியதுடன், சிறைபிடிக்கப்பட்டிருந்த கைதிகளின் உறவினர்களை மீட்டனர்.

இந்த மோதலில் ஏழு கைதிகள் தலை துண்டித்தும், ஆறு கைதிகள் உயிருடன் எரித்தும் கொல்லப்பட்டதாகவும், மற்றவகையில் காயம் அடைந்தவர்களுடன் சேர்த்து மொத்தம் 25 கைதிகள் பலியானதாகவும் சிறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.