ஞானசார தேரரின் விடுதலையானது தனக்கும் குடும்பத்துக்கும் உயிர் அச்சுறுத்தல்- சந்தியா

323 0

ஞானசார தேரரின் விடுதலையானது தனக்கும் தனது குடும்பத்துக்கும் பாரிய உயிர் அச்சுறுத்தலாக அமையும் எனவும், இதற்குப் பொறுப்புக் கூறுவதற்கு முன்வருமாறு ஐக்கிய நாடுகள் சபையிடமும், ஐக்கிய நாடுகள் சபையில் அங்கத்துவம் பெற்றுள்ள நாடுகளின் சகல தூதுவர் அலுவலகங்களிடமும் வேண்டுகோள் விடுக்கின்றேன் என ஊட­க­வி­ய­லாளர் பிரகீத்       எக்­னெ­லி­கொ­டவின் மனைவி சந்­தியா எக்­னெ­லி­கொ­ட தெரிவித்தார்.

கலகொட அத்தே ஞானசார தேரரின் பொது மன்னிப்பு குறித்து விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பொன்று அவரினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே இதனைக் கூறினார்.