அரசாங்கத்திற்கு எதிரான பிரேரணைக்கே முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டும் -ரணில்

317 0

ரிஷாத்திற்கு எதிராக கொண்டுவரும் நம்பிக்கையில்லா பிரேரணையை விட அரசாங்கத்திற்கு எதிராக கொண்டுவரும் நம்பிக்கையில்லா பிரேரணைக்கே  முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க சபையில் தெரிவித்தார். எனினும் இதனை நிராகரித்த ஜே.வி.பி  அமைச்சர் ரிஷாத் பதியுதீன் மீதான நம்பிக்கையில்லா பிரேரணையே முதலில் விவாதிக்க வேண்டும் அதன் பின்னரே எமது பிரேரணை எடுத்துகொள்ளப்பட வேண்டும்  என வலியுறுத்தியது.