உலகில் இயற்கை துறைமுகங்களில் ஒன்றான திருகோணமலை துறைமுகத்தில் பாரிய ஏற்றி இறக்கல் முறைமை ஒன்று நடை பெறுகின்றது.

இத்துறைமுகமானது மலைகளால் சுழப்பட்டுள்ளதால் அலைத்தடுப்பு இயற்கையாகவே அமையப்பெற்றது இதன் சிறப்பம்சமாகும்.
மார்ஷல் தீவுக்கு சொந்தமான 177,931 மெற்றிக்தென் நிறையுடையதும் 292 மீற்றர் நீளமுடையதுமான பாரிய கப்பலொன்று திருகோணமலை துறைகத்தை வந்தடைந்துள்ளது.

திருகோணமலை இயற்கை துறைமுகத்தின் மகத்துவத்தை அறிந்து குறித்த கப்பல் திருகோணமலைத் துறைமுகத்தில் தரிந்து நின்று திருத்தப்பணிகளை மேற்கொண்டு வருகின்றது.
இந்தனோசியாவிலிருந்து இந்தியாவுக்கு செல்லவிருந்த குறித்த பாரிய கப்பல் இலங்கையின் காலிகடற்பரப்பில் பழுதடைந்துள்ளது.

சம்பவம் தொடர்பில தெரியவருவதாவது, இந்தோனேசியாவிலிருந்து 156,948 மெற்றிக்தொன் நிலக்கரியினை சுமந்து கொண்டு இந்திய துறைமுகமான முன்றா துறைமுகத்துக்கு MV. Star Angie (DWT: 177,931 mt, LOA: 292 m) என்ற கப்பல் பயணிக்கும் வேளையில் காலி துறைமுகத்துக்கு அருகே பழுதடைந்தது எனவே திருத்துவதற்கு அதிலிலுள்ள நிலக்கரியினை இறக்கிய பின்பே உலர் கப்பல் திருத்தும் மேடைக்கு ஏற்றி திருத்த வேண்டும்.
ஆகையால் இந் நடவடிக்கையினை காலி, அம்பாந்தோட்டை, கொழும்பு ஏன் இந்திய துறைமுகங்களில் கூட இவ்வாறான கப்பலில் இருந்து வேறு கப்பலுக்கு பொருட்களை மாற்றும் முறைமையினை செய்யமுடியாது.
காரணம் அதி உயர் அலைகளின் தாக்கமாகும் ஆகையால் திருகோணமலை இயற்கை துறைமுகமே இந் நடவடிக்கைக்கு சாலச்சிறந்தது என தீர்மானிக்கப்பட்டு பண்டுகாபய, கப்பிறிகோன் போன்ற இரு இழுவை படகு (TUG) முலம் இழுத்து கொண்டுவரப்பட்டு MV.Gretke oldendorss என்ற பாரமுயர்த்தி பொருத்தப்பட்டுள்ள கப்பல் மூலம் MV. Acuva carrier என்ற கப்பலுக்கு சுமார் 70,000 மெற்றிக்தொன் நிலக்கரி முதற்தடவையாக ஏற்றப்படுகிறது.
மிகுதியை இன்னும் இரு கப்பல்களுக்கு ஏற்றுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்த கப்பலில் இருந்து கப்பலுக்கு மற்றும் முறமை மூலம் பாரிய தொகை வருமானமாக கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன் மேற்குறிப்பிட்ட பழுதடைந்த கப்பல் திருத்தப்படுவதற்காக சிங்கப்பூர் துறைமுகத்துக்கு செல்லவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

