பிரித்தானிய வாழ் தமிழ் மக்களுக்கான அவசர அறிவிப்பு: தேசக் கடமைக்காக ஒன்றிணைவோம்

186 0

தமிழ்த் தேசிய இனத்தின் ஆணிவேராகிய எமது தேசியத்தலைவரையும் அவரின் தலைமையிலான எமது விடுதலைப்போராட்டத்தையும் அதன் இறுதி இலக்காகிய சுதந்திர தமிழீழத்தையும் இழிவுபடுத்தி, பிரித்தானிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் (British Broadcasting Cooperation – BBC)
தமிழ்ப்பிரிவானது, 18 – 05 – 2019 அன்று, அதாவது எமது இனவழிப்பின் 10 வருட, கொடுந்துயரம் நிகழ்த்தப்பட்ட அதே நாளில், திட்டமிட்டபடி வலிந்து, உண்மைக்குப் புறம்பான மற்றும் வரலாற்றை திரிபுபடுத்தக்கூடிய இரண்டு காணொளிகளை, தமது முகப்புத்தகத்தில் (BBC News தமிழ்) வெளியிட்டிருந்தார்கள்.

மிகவும் நேர்த்தியான முறையில், ஒட்டுமொத்த எமது தமிழினத்திற்கு எதிராகவும், இந்த இரு காணொளிகளும் தயார்செய்யப்பட்டிருக்கின்றது.

இந்திய அரசின் செல்வாக்கின் கீழ் இயங்கக்கூடிய இந்த பிரித்தானிய ஒளிபரப்புக்கூட்டுத்தாபனத்தின் தமிழ்ப்பிரிவானது, எமது ஈழத்தமிழர்களுக்கு எதிராக இந்தப் பத்து வருட காலப்பகுதியின் பின் குழிதோண்ட முயற்சி எடுத்துக்கொண்டிருக்கிறார்கள் என்பது வெளிப்படை.

பிரித்தானிய வாழ் தமிழ் மக்களே,

எமது இனத்தின் மேதகு தேசியத் தலைவரையும், தேசவிடுதலை வீரர்களையும் அவர்களின் தர்மத்தின் வழியிலான ஆயுத போராட்டத்தையும் எவராயினும் இனிக் கொச்சைப்படுத்த தமிழர்கள் நாங்கள் ஒருபோதும் அனுமதிக்கப்போவதில்லை என்பதை சர்வதேசத்திற்கு சொல்ல பின்வரும் அறவழிப்போராட்டத்தில் அவசரமாகக் கலந்துகொள்வோம்.

எழுந்து வீதிக்கு இறங்கிப்போராடுவோம்!

காலம்: 24 – 05 – 2019, வெள்ளிக்கிழமை

நேரம்: மதியம் 2 மணி

இடம்: Portland Place
London
W1A 1AA

போராட்டமே வெற்றிக்கு வழிவகுக்கும்!

அலை அலையாக, மத்திய லண்டனில் உள்ள, குறித்த பிரித்தானிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் (BBC Broadcasting House) முன் அணிதிரண்டு, எமது முழு எதிர்ப்பையும் காண்பிப்போம்.

இது, எமது இனத்தினது தர்ம வழியிலான போராட்டத்திற்கு எதிரான அனைவருக்கும், ஒரு பாடமாக அமையட்டும்!