யேர்மனியில் நடைபெற்ற தமிழின அழிப்பு நாள் நிகழ்வு-2019

2636 0

யேர்மனி டுசில்டோர்வ் நகரில் மே 18 அன்று தமிழின அழிப்புநாள் 2019 மிகச்சிறப்பாக நடைபெற்றது. டுசில்டோர்வ் நகரத்தின் புகையிரதநிலயத்திற்கு முன்புறமாக உள்ள வீதியில் கறுப்பு உடைகள் அணிந்து அணிதிரண்ட மக்கள். கறுப்பு நிற பலூன்களில் இன அழிப்பு சம்பந்தமமான கோசங்களை எழுதி ஒவ்வொருவரும் தங்களின் கைகளில் ஏந்தியபடியும், பாதாதைகளையும் ஏந்தியபடியும் ஊர்வலமாக இம் மாநிலத்தின் பாராளுமன்றம் நோக்கிப் புறப்பட்டனர்.

ஆயிரக்கணக்கில் கோசங்களை எழுப்பியவாறு ஊர்வலமாகச் சென்ற மக்கள் இரண்டரை மணித்தியாலங்களின் பின்பு டுசில்டோர்வ் பாராளுமன்றத்தை வந்தடைந்தனர். அத்திடலில் தேசியக்கொடியும் ஈகைச்சுடரும் ஏற்றிவைக்கப்பட்டு நிகழ்வுகள் ஆரம்பமாகின மக்கள் தங்கள் கைகளில் ஏந்திவந்த கோசங்கள் எழுதப்பட்ட பலூன்கள் ஆயிரக்கணக்கில் வானத்தை நோக்கிப் பறக்கவிடப்பட்டன.

பின் மக்கள் அனைவரும் வரிசையாக வந்து இலங்கை அரசால் படுகொலை செய்யப்பட்ட மக்களுக்கு மலர்தூவி விளக்கேற்றி தங்கள் இதய வணக்கத்தைச் செலுத்தினர். இதன்போது மேடை நிகழ்வுகளும் நடைபெற்றுக் கொண்டிருந்தன.