பொலிஸில் தயாசிறி ஆஜர்

238 0

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர கொழும்பு மாவட்டத்திற்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் அலுவலகத்தில் முன்னிலையாகியுள்ளார்.

குளியாப்பிட்டிய உள்ளிட்ட வடமேல் மாகாணத்தின் பல பகுதிகளில் கடந்த வாரத்தில் முஸ்லிம்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டதோடு அவர்களின் சொத்துக்களுக்கும் சேதம் விளைவிக்கப்பட்டன.

இந்த வன்முறைச்சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் பலர் கைது செய்யப்பட்டிருந்தனர். அவர்களில் சிலரை பிணையில் விடுதலை செய்தாரென தயாசிறி ஜயசேகர மீது குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன.

இந்நிலையில் இந்த விடயம் தொடர்பாக வாக்குமூலம் வழங்குவதற்காகவே  இன்று சனிக்கிழமை அவர் இவ்வாறு முன்னிலையாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.