சாம்சங் நிறுவனம் வெளியிட்ட அதிநவீன செல்போனை விமானத்தில் எடுத்து செல்ல அமெரிக்கா தடை

465 0

201610151219425375_samsung-company-issued-latest-cell-phone-plane-take-america_secvpfசாம்சங் நிறுவனம் வெளியிட்ட அதிநவீன செல் போனை விமானத்தில் எடுத்துச் செல்ல அமெரிக்கா தடை விதித்துள்ளது.

ஆப்பிள் நிறுவனம் சமீபத்தில் புதிய ‘ஐ போன்’ வெளியிட்டது. அதற்கு போட்டியாக சாம்சங் நிறுவனம் ‘கேலக்ஸி நோட்-7’ என்ற பெயரில் புதிய செல்போனை வெளியிட்டது. இவை ஐரோப்பா மற்றும்அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கு விற்பனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதற்கிடையே இந்த செல்போனில் தீப்பிடிப்பதாக தகவல் பரவி உள்ளது.

படுக்கை அறையில் தானாக தீப்பிடித்து எரிந்ததாக அமெரிக்காவின் கொண்டக்கியை சேர்ந்த ஒருவர் புகார் கூறினார். விமான பயணத்தின் போது செல்போனில் இருந்து புகை வந்ததாக அமெரிக்கர் தெரிவித்தார்.

இது போன்று பல்வேறு புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. இதை தொடர்ந்து விமானங்களில் சாம்சங் கேலக்ஸி நோட்-7 செல் போன்களை எடுத்து செல்ல அமெரிக்கா தடை விதித்துள்ளது.

இது குறித்து அமெரிக்க போக்குவரத்து துறை ஒரு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதில், அத்தகைய செல் போன்களை பயணிகள் விமானங்களிலோ அல்லது அவர்களது லக்கேஜ்களிலோ எடுத்து செல்லக்கூடாது. இது இன்று மாலை 4 மணி முதல் அமலுக்கு வருகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே இத்தகைய புகார்களை தொடர்ந்து கேலக்ஸி நோட்-7 செல்போன்கள் உற்பத்தி செய்வதை இந்த வாரம் முதல் நிரந்தரமாக நிறுத்துவதாக சாம்சங் நிறுவனம் அறிவித்துள்ளது.