ஏ.சி.யில் மின் கசிவு- தீ விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலி

87 0

திண்டிவனம் அருகே ஏ.சி.யில் ஏற்பட்ட மின்கசிவால் உடல் கருகி ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலியானார்கள்.

திண்டிவனம் அருகே உள்ள காவேரிப்பாக்கத்தில் வசித்து வருபவர்கள் ராஜி.  அதே பகுதியில் வெல்டிங் கடை வைத்து வந்துள்ளார். அவருடன் மனைவி லதா, மகன் கவுதம் காவேரிபட்டினத்தில் வசித்து வந்துள்ளனர். இந்த நிலையில் நேற்று இரவு அவர்களது வீட்டின் ஒரு அறையில் இருந்த ஏ.சி. எந்திரத்தில் மின் கசிவால் தீவிபத்து ஏற்பட்டுள்ளது. இதனால் ராஜி, மனைவி லதா, மகன் கவுதம் ஆகிய மூவரும் உடல்கருகி உயிரிழந்துள்ளனர்.

ஏ.சி.யில் இருந்து மின் கசிந்த கியாஸ் அவர்கள் 3 பேருக்கும் எமனாக மாறி விட்டது. தூக்கத்தில் இருந்ததால் கியாஸ் கசிந்து இருப்பது அவர்களுக்கு தெரியவில்லை. மயக்க நிலையிலேயே 3 பேரும் பரிதாபமாக இறந்து விட்டனர்.

ஏ.சி. எந்திரத்தில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக ஏற்பட்ட தீ விபத்தில் ஒரே குடும்பத்தில் 3 பேர் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.