ஜனாதிபதியும் பிரதமரும் தவறை ஏற்றுக்கொண்டு பதவி விலகுவார்களா? – ரில்வின் சில்வா

330 0

அரசாங்கத்தில் இருக்கும் ஒருசில அமைச்சர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது, அவர்கள் குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல் நாட்டின் உண்மையான நிலைமையை அரசாங்கம் மக்களுக்கு எடுத்துக்கூற வேண்டும். நாட்டின் தற்போதைய பாதுகாப்பு நிலைமைகள் எவ்வாறு உள்ளது என்ற உண்மையை மக்களுக்கு தெரிவிக்க வேண்டும். அதிகாரிகள் தவரிளைத்தனர் என குற்றம் சுமத்த முன்னர் ஜனாதிபதியும் பிரதமரும் தவறை ஏற்றுக்கொண்டு பதவி விலகுவார்களா என்பதை கேட்க வேண்டும் என மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்தார்.

இலங்கைக்குள் இனவாத மோதல்கள் அடக்குமுறைகள் கையாண்டால் சர்வதேசம் தலையிடுவதை தவிர்க்க முடியாது போய்விடும். இலங்கையை மீண்டும் சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்தும் முயற்சிகளை எடுத்துவிட வேண்டாம்.  குற்றவாளிகளை தண்டிக்க வேண்டும். ஆனால் குற்றவாளிகள் யார்? முதலில் குறித்த இஸ்லாமிய அமைப்பினை தண்டிக்க வேண்டும், இவ்வாறான சம்பவம் இடம்பெறப்போகின்றது என்ற தெரிந்தும் நடவடிக்கை எடுக்காத அரச தலைவர்கள், அதிகாரிகள் அனைவரும் குற்றவாளிகள்.

 

கடந்த 21 ஆம் திகதி நாட்டில் இடம்பெற்ற சம்பவத்தை அடுத்து அதனுடன் தொடர்புடைய குழுக்கள் கைது செய்யப்படுவதுடன் அவர்களின் ஆயுதங்களும் கண்டறியப்பட்டு தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. எனினும் இந்த சம்பவங்களை  காரணமாக வைத்துகொண்டு நாட்டில் அமைதியின்மை ஏற்பட்டு  வருகின்றது.

இன்று நாட்டில் சில பகுதிகளில் இனவாத தாக்குதல்கள் இடம்பெற்று வருகின்றது. இது மிகவும் மோசமான செயற்பாடாகும். இந்த செயற்பாடுகள் அனைத்தின் பின்னணியிலும் அரசியல் தூண்டுதல் உள்ளது. இந்த காரணிகள் அனைத்துமே இனவாத குழுக்களுக்கும் அடிப்படைவாத குழுக்களுக்குமே  சாதகமாக அமையும். ஒரு காரணிகளை கையில் எடுத்துக்கொண்டு முஸ்லிம் சமூகம் மீது அடக்குமுறையை கையாண்டால் இருந்தில் இது அடிப்படைவாத குழுக்களின் செயற்பாடு சரி என்ற நிலைமைக்கு அமையும்  என மேலும் தெரிவித்துள்ளார்.