நீதியை நிலைநாட்ட வேண்டும்: அருட்தந்தை இ.செபமாலை 

291 0

குண்டுதாரிகளிற்கு பின்னாலிருக்ககூடிய செல்வந்தர்கள், அரசியல்வாதிகள் சட்டத்தின் முன் நிறுத்தபட்டு விசாரணைக்குட்படுத்தும்போது தான்  நீதியை நிலைநாட்டமுடியும் என்று அருட்தந்தை இ.செபமாலை  தெரிவித்தார்.

ஈஸ்டர் தாக்குதலை தொடர்ந்து வவுனியாவில், இனநல்லிணக்கம் மற்றும், சமூக நல்லிணக்கத்தினை பாதுகாக்கும் முகமாக வவுனியா பிராந்திய மனித உரிமை ஆணைக்குழு, சர்வ மதகுழுவினர் மற்றும் சிவில் சமூக பிரிதிநிதிகளிற்கிடையிலான கலந்துரையாடல் ஒன்று வவுனியா வெளிவட்ட வீதியில் அமைந்துள்ள பிராந்திய மனித உரிமை ஆணையாளர் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது.

குறித்த கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அருட்தந்தை இ.செபமாலை மேற்படி தெரிவித்தார்.

இதில் அவர் மேலும் தெரிவித்ததாவது, கடந்த கலங்களில் குற்றவாளிகள் தண்டிக்கபடாமையினாலேயே மீண்டும் ஒரு கொடூர சம்பவம் இடம்பெற்றுள்ளது. தற்போதும் குற்றவாளிகள் தண்டிக்கபாடாத ஒரு நிலமையே காணப்படுகின்றது. விசாரணை என்ற பெயரிலே பலர் கைதுசெய்யப்பட்டாலும் அந்த சம்பவத்தின் பிரதான சூத்திரதாரிகள், பின்னால் நின்று இயக்குபவர்கள் சுதந்திரமாக நடமாடுவதாக ஊடகங்கள் வாயிலாக அறியமுடிகிறது.

தாக்குதல் நடைபெறுவது தொடர்பாக அரசிற்கு கொடுக்கப்பட்ட எச்சரிக்கைகளை உதாசீனபடுத்தியதன் மூலம் அவர்களும் இதற்கு காரணாமாகியிருக்கிறார்கள். எனவே அவர்களும் இதற்கு பதில் கூற வேண்டும்.

வெறுமனே ஆலயங்களிற்கு பாதுகாப்பை  வாழங்குவது மாத்திரம் போதுமானதல்ல. மாறாக இந்த சம்பவத்திற்கு பின்னாலிருக்ககூடிய செல்வந்தர்கள், அரசியல்வாதிகள் சட்டத்தின் முன் நிறுத்தபட்டு விசாரணைக்குட்படுத்தும் போது தான் நீதியை நிலைநாட்டமுடியும்.  எனவே மனித உரிமை ஆணைக்குழுவானது இலங்கை அரசிற்கும், அரசியல்வாதிகளிற்கும் அழுத்தங்களை பிரயோகிப்பதுடன், குற்றவாளிகள் அவர்களின் பின்னாலிருக்க கூடிய தலைவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தபடுவதற்கு மனித ஆணைக்குழு மற்றும் சிவில் சமூகம் என்பன அழுத்தங்களை பிரயோகிக்க  வேண்டும் என்பதை தெரியபடுத்தியுள்ளோம் என்றார்.

கலந்துரையாடலில் வவுனியா பிராந்திய மனித உரிமைகள் ஆணைக்குழுவின் இணைப்பாளர் ஆர்.பிரியதர்சன , சட்டத்தரணியும் விசாரணை அதிகாரியுமான லீ,வசந்தராஜா, சிவில் சமூக பிரதிநிதி வே. சுப்பிரமணியம், சர்வமத குழுவினர் என பலர் கலந்து கொண்டிருந்தமையும் குறிப்பிடதக்கது.