ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களை அடுத்து நாடளாவிய ரீதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது எனவும், மீண்டுமொரு தாக்குதல் நடைபெறாது என்று அரசாங்கம் கூறுகின்ற போதிலும் மக்களுக்கு அதில் முழுமையான நம்பிக்கை இல்லை என்று ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்தார்.
ஆகையினாலேயே இன்றைய தினம் குண்டுத்தாக்குதல் இடம்பெறுவதற்கான வாய்ப்புள்ளது எனப் பரவிய தகவல்களைத் தொடரந்து வீதியில் மக்களின் நடமாட்டம் வெகுவாகக் குறைந்திருந்துள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.
பத்தரமுல்ல நெலும் மாவத்தையிலுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமை அலுவலகத்தில் இன்று திங்கட்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கருத்து வெளியிட்டார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,
ஈஸ்டர் ஞாயிறு குண்டுத்தாக்குதல்களை முன்னரே தடுக்காத அரசாங்கத்தைப் பதவியிலிருந்து இறக்குங்கள் என்றும் கார்டினல் குறிப்பட்டிருக்கிறார்.
மக்களின் நம்பிக்கையை இழந்த இந்த அரசாங்கம் தொடர்ந்தும் பதவியில் நீடிப்பதை விடவும், இத்தருணத்தில் தமக்குத் தேவையான தலைமைத்துவத்தைத் தெரிவு செய்கின்ற பொறுப்பை மக்களிடம் வழங்குங்கள். உடனடியாகப் பாராளுமன்றத்தைக் கலைத்து, தேர்தலை நடாத்துவதன் ஊடாக மக்கள் தமது பிரதிநிதியைத் தாமே தெரிவு செய்து கொள்வார்கள் என்று குறிப்பிட்டார்.

