இலங்கையில் அமைதி சீர்குலைக்கப்பட்டுள்ள போதும், ஏற்பட்ட துயரங்களை ஆற்றுப்படுத்திக்கொண்டு மக்கள் இயல்பு நிலைக்கு திரும்புவது அவசியமானதாகும் என தமிழ் முற்போக்கு கூட்டணியின் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம். திலகராஜ் தெரிவித்துள்ளார்.
ஹட்டன் – டன்பார், கொட்டகலை – டெரிகிளயர், ரொசிட்டா போன்ற பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட உள்ளக பாதை, மைதான அபிவிருத்தி முதலான விடயங்களை மக்கள் பாவனைக்கு கையளிக்கும் நிகழ்வில் கலந்து கொண்ட கருத்து வெளியிட்ட போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
2009 ஆம் ஆண்டு உள்நாட்டு யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டதன் பின்னர் நாட்டில் நிலவிய அமைதியான சூழல், 2019 ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதல்களால் அமைதியிழந்த நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
இந்த நிலைமைகளை சீர் செய்ய செய்ய அரசாங்கம் பல்வேறு பிரயத்தனங்களை மேற்கொண்டு வருகின்ற நிலையில், ஏற்பட்ட துயரங்களை ஆற்றுப்படுத்திக்கொண்டு பொதுமக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்புவதும் இன்றியமையாதது. அதனையே வலியுறுத்தி மக்கள் சந்திப்புகளை நடாத்தி வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.திலகராஜ் தெரிவித்துள்ளார்.

