பிரிவேனா கல்வியைப்போன்று மத்ரஸா கல்வியையும் கல்வி அமைச்சுக்கு கீழ் கொண்டுவரவேண்டும்-ஹர்ஷடி

367 0

அடிப்படைவாதத்தால் பாதிக்கப்பட்டிருப்பது முஸ்லிம் சமூகமாகும். அதனால் அதனை முற்றாக ஒழிக்கும் பொறுப்பு முஸ்லிம் மக்களுக்கு இருக்கின்றது. அத்துடன் பிரிவேனா கல்வியைப்போன்று மத்ரஸா கல்வியையும் கல்வி அமைச்சுக்கு கீழ் கொண்டுவரவேண்டும் என அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சர் ஹர்ஷடிசில்வா தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று வெள்ளிக்கிழமை கடந்த 21ஆம் திகதி பயங்கரவாத தாக்குதலையடுத்து சுற்றுலாத்துறைக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்த சபை ஒத்திவைப்பு வேலை விவாதத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு குறிப்பிட்டார்.

அடிப்படைவாதம் எந்த இனத்தில் இருந்து வந்தாலும் அதற்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படவேண்டும். அடிப்படைவாதிகள் பெளத்தம், இந்து. இஸ்லாம் என்ற அனைத்து இனங்களிலும் இருக்கின்றனர். அவர்கள் தலைதூக்காதவகையில் சட்டதிட்டங்கள் மேற்கொள்ளப்படவேண்டும் எனவும் இதன்போது குறிப்பிட்டார்.