பாராளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பை பலப்படுத்த அரசாங்கம் நிதி ஒதுக்குவது பொருத்தமற்றது-ஜி. எல். பீறிஸ்

374 0

தேசிய பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ள நிலையில் பாராளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பை பலப்படுத்த அரசாங்கம் நிதி ஒதுக்குவது பொருத்தமற்றது என  பேராசிரியர்  ஜி. எல். பீறிஸ் தெரிவித்தார்.

ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சிக்கும் பொதுஜன பெரமுனவிற்கும் இடையில அமைக்கவுள்ள பரந்துப்பட்ட பேச்சுவார்த்தை தொடர்பிலான கலந்துரையாடல் இன்று எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்றது. இந்த பேச்சுவார்த்தையின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

சுதந்திரக் கட்சி சார்பில் பாராளுமன்ற உறுப்பினர்களான   தயாசிறி  ஜயசேகர, திலங்க சுமதிபால மற்றும் சுதந்திர கட்சியின் முன்னாள்  செயலாளர் ரோஹன லக்ஷமன் பியதாசவும், பொதுஜன பெரமுன  சார்பில்  பேராசிரியர் ஜி.எல்.பீறிஸ், ஜகத் வெல்லவத்த ஆகியோர் கலந்துகொண்டனர்.

புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்திற்கு ஒருபோதும் ஆதரவு வழங்க வேண்ம் என்று  சுதந்திர கட்சியினரிடம் கோரிக்கை விடுத்தாகவும், பரந்துப்பட்ட  கூட்டணியமைத்தல் தொடர்பிலான  அடுத்தக்கட்ட  கலந்துரையாடல் இம்மாதம் 30 ஆம் திகதி இடம் பெறும் எனவும் அவர் இதன்போது குறிப்பிட்டார்.