ஹபரனை விபத்தில் சிறுவன் பலி!

337 0

ஹபரனை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 10 வயது சிறுவன் உயிரிழந்துள்ளார். இவ்விபத்து  நேற்று நடைப்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.

 

ஹபரன – திருகோனமலை பிரதான வீதியில் செவனகம சந்தியில் திருகோணமலை நோக்கி சென்ற கெப் ரக வாகனம் வீதியை கடக்கமுற்பட்ட சிறுவன் மீது மோதியதில் பலத்தகாயங்களுக்குள்ளான சிறுவன் ஹபரனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார்.

அவர் திருகோணமலை வீதி ஹபரனை பகுதியை சேர்ந்த என விசாரணையின் போது தெரியவந்துள்ளதோடு,கெப் சாரதியை ஹபரனை பொலிஸார் கைது செய்துள்ளதுடன் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.