ஹட்டன் தனியார் பேருந்து தரிப்பிடத்துக்கு அருகாமையில் உள்ள மலசல கூடத்திற்கு அருகில் உள்ள குப்பைமேட்டில் இராணுவத்தினரின் சீருடை மற்றும் தொப்பி ஒன்றும் பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் இன்று காலை 09மணி அளவில் மீட்கபட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
தனியார் பேருந்து தரிப்பிடத்திற்கு அருகாமையில் நடமாடிய பொதுமக்களால் வழங்கபட்ட தகவலுக்கு அமைய சம்பவ இடத்திற்கு வந்த ஹட்டன் பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் இணைந்து குறித்த சீருடையை மீட்டுள்ளனர்.சம்பவம் தொடர்பில் விசாரனைகளை ஆரம்பித்துள்ள பொலிஸார் இதுவரையிலும் சந்தேக நபர்கள் எவரும் கைது செய்யபடவில்லையெனவும் யாராவது சீருடையயை கொண்டுவந்து குறித்த இடத்தில் போட்விட்டு சென்று இருக்கலாம் என ஹட்டன் பொலிஸார் சந்தேகிக்கின்றனர் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை ஹட்டன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடதக்கது.

