கிரிபத்கொடை பொலிஸ் பிரிவில் ஈரியவடிய வீதியில் உள்ள பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனையகத்தில் திடீர் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.
நேற்று இரவு 10.40 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
பொலிஸார், கம்பஹா தீயணைப்பு பிரிவின் அதிகாரிகள் மற்றும் பிரதேசவாசிகள் இணைந்து தீயை முழுமையாக கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்ததுள்ளனர்.
தீயின் காரணமாக பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனையகம் மற்றும் அருகில் இருந்த மேலும் இரண்டு கடைகளும் தீயினால் எரிந்துள்ளன.
தீயினால் உயிரிழப்புக்கள் ஏற்படவில்லை என்பதுடன், தீயிற்கான காரணம் என்னவென்று இதுவரை கண்டறியப்படவில்லை.
பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

