போக்கோ ஹராம் தீவிரவாதிகள் கடத்திய 21 மாணவிகள் விடுதலை

286 0

201610131651468237_boko-haram-releases-21-girls-to-nigerian-government_secvpfபோக்கோ ஹராம் தீவிரவாத அமைப்பினால் கடத்தப்பட்ட 21 பாடசாலை மாணவிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக பி பி சி செய்திச் சேவை செய்தி வெளியிட்டுள்ளது.

நைஜீரியாவின் ஜனாதிபதியின் ஊடக பேச்சாளர் இதனை உறுதிசெய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

விடுவிக்கப்பட்ட மாணவிகள் அந்த நாட்டின் பாதுகாப்பு படையினர்வசம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2014 ஆம் ஆண்டு நைஜீரியாவின் சிபொக் நகரில் உள்ள பாடசாலை ஒன்றில் வைத்து 270 பாடசாலை மாணவிகள் பொக்கோ ஹராம் அமைப்பினால் கடத்திச்செல்லப்பட்டனர்.

பொக்கோ ஹராம் தீவிரவாத அமைப்பிற்கும் அரசாங்கத்திற்கும் இடையிலான கைதிகள் பரிமாற்றத்தின்போது இந்த மாணவிகள் மீட்கப்பட்டதாக நைஜீரிய ஊடகங்கள் செய்திவெளியிட்டுள்ளன.