குடிநீரில் விஷம் கலக்கப்பட்டுள்ளதாக பொது மக்களிடையே வதந்திகளை பரப்பிய சம்பவத்தி கைது செய்யப்பட்ட இருவரினதும் விளக்கமறியலில் மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.
இருவரையும் எதிர்வரும் 17ம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மோதரை பொலிஸாரால் சந்தேகநபர்கள் கொழும்பு மேலதிக நீதவான் லோசனி அபேவிக்ரம முன்னிலையில் ஆஜர் செய்யப்பட்டனர்.
சந்தேகநபர்கள் குடிநீரில் விஷம் கலக்கப்பட்டுள்ளதாக பொய் வதந்தியை பரப்பி இனங்களிடையே கசப்புணர்வை தோற்றுவிக்க செயற்பட்டுள்ளதாக பொலிஸார் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.
புளூமெண்டல் பொலிஸ் பிரிவில் குடிநீரில் விஷம் கலக்கப்பட்டுள்ளதாக ஒலி பெருக்கி மூலம் சந்தேகநபர்கள் பொய்ப்பிரச்சாரம் செய்துள்ளதாக பொலிஸார் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.


