முதல்வர் பதவி விலக தயாரா? – துரைமுருகன் கேள்வி

339 0

எனக்கு சொந்தமான இடத்தில் ரூ.13 கோடியை வருமான வரித்துறை கைப்பற்றியதை முதல்-அமைச்சர் நிரூபிக்காவிடில் பதவி விலக தயாரா? என்று திமுக பொருளாளர் துரைமுருகன் கேள்வி எழுப்பி உள்ளார். #

திமுக பொருளாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:

எனக்கு சொந்தமான இடத்தில் 12 கிலோ தங்கம், ரூ.13 கோடியை வருமான வரித்துறை கைப்பற்றியதை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நிரூபித்தால் நான் என் பதவியை ராஜினாமா செய்கிறேன்; இல்லாவிடில் முதல்-அமைச்சர் பதவி விலகத் தயாரா என கேள்வி எழுப்பி உள்ளார்.

எங்கள் வீடு, கல்லூரியில் நடந்த  சோதனைகளுக்கு பின் ரூ.10 லட்சம் மட்டுமே கைப்பற்றப்பட்டது. வீடு, கல்லூரியில் நடந்த சோதனையில் எங்கும் தங்கம் கைப்பற்றப்படவில்லை

எனக்கு சொந்தமான இடங்களில் 12 கிலோ தங்கம், ரூ.13 கோடியை வருமான வரித்துறை கைப்பற்றியதாக சூலூரில் முதல்வர் பேசியிருந்தார். அவர் அப்படி பேசியது ஜமுக்காளத்தில் வடிகட்டிய பொய். 

சூலூர் தேர்தல் பரப்புரையில் எதுவும் தெரியாத சராசரி மனிதன் போல் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசியிருப்பது கேலிக்குரியது  என்று துரைமுருகன் கூறி உள்ளார்.

தேர்தல் பரப்புரையில் முதல்வர் கூறிய குற்றச்சாட்டு தவறானது.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.