ஐ.நா.வின் புதிய பொதுச்செயலாளராக அன்டோனியோ கட்டெரெஸ் நாளை முறைப்படி தேர்வு

272 0

201610121357310560_unga-to-elect-antonio-guterres-as-next-secretary-general_secvpfஐ.நா.வின் புதிய பொதுச்செயலாளராக அன்டோனியோ கட்டெரெஸ் நாளை முறைப்படி தேர்வு செய்யப்பட உள்ளார்.

ஐ.நா. சபையின் தற்போதைய பொதுச்செயலாளராக பான்-கி-மூன் உள்ளார். இந்த ஆண்டு இறுதியில் பான் கி மூன் பதவிக்காலம் முடிவடைய இருப்பதால் ஐ.நா.வின் அடுத்த பொதுச்செயலாளரை தேர்ந்தெடுப்பதற்கான பணிகள் நடைபெற்று வந்தன.

இந்நிலையில், ஐ.நா. சபையின் அடுத்த பொதுச்செயலாளராக போர்ச்சுகீசிய முன்னாள் பிரதமர் அன்டோனியோ கட்டெரெஸை தேர்வு செய்ய கடந்த அக்டோபர் 5-ம் தேதி பாதுகாப்பு கவுன்சில் முடிவு செய்தது.இந்நிலையில், ஐ.நா.வின் புதிய பொதுச்செயலாளராக அன்டோனியோ கட்டெரெஸ் நாளை அதிகாரப்பூர்வமாக தேர்வு செய்யப்பட உள்ளார்.

பான் கி-மூனை தொடர்ந்து கட்டரெஸ் ஐ.நா. சபையின் 9-வது பொதுச்செயலாளராக பதவியேற்க உள்ளார். இவரது பதவிக் காலம் ஜனவரி 1-ம் தேதி முதல், டிசம்பர் 31, 2022 வரை இருக்கும்.
முன்னதாக போர்ச்சுகலில் பிரதமராக 1995-ம் ஆண்டு முதல் 2002 வரை பதவி வகித்துள்ளார். மேலும் அகதிகளுக்கான ஐ.நா. உயர் ஆணையராக 2005-ம் ஆண்டு முதல் 2015 வரை பதவி வகித்து வந்தார்.