இலங்கையில் பௌத்த மதத்திற்குரிய இடம் தொடர்ந்து பேணப்படும்-ஜனாதிபதி(காணொளி)

388 0

presidentஜனாதிபதி பதவிக்கு வந்தது நாட்டை துண்டாடுவதற்கோ பிரிப்பதற்கோ, பாதுகாப்புத் தரப்பினரை பலவீனப்படுத்தவோ அல்லது பௌத்த மதத்துக்குரிய இடத்தை அரசியலமைப்பிலிருந்து அகற்றுவதற்கோ அல்ல என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

ஹம்பாந்தோட்டை சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய ஜனாதிபதி, நாட்டின் சுதந்திரம் இறையாண்மை மற்றும் வரலாற்று மரபுரிமைகளை உயர்ந்த பட்சம் பாதுகாத்து சுதந்திர ஜனநாயக நாடாக இலங்கை கட்டியெழுப்பப்படும் என்று கூறினார்.

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர், கடற்றொழில் நீரியல்வள அபிவிருத்தி அமைச்சர் மஹிந்த அமரவீரவின் அரசியல் வாழ்வின் 25ஆவது ஆண்டு நிறைவையொட்டி அமரவீரவின் வழித்தடம் என்ற நிகழ்வு நேற்று நடைபெற்றது.

இங்கு கருத்து தெரிவித்த ஜனாதிபதி, நாட்டின் சுதந்திரம் இறையாண்மை மற்றும் வரலாற்று மரபுரிமைகளை உயர்ந்த பட்சம் பாதுகாத்து சுதந்திர ஜனநாயக நாடாக இலங்கை கட்டியெழுப்பப்படும்.

வரலாற்றினால் எமக்கு வழங்கப்பட்ட பல பொறுப்புகள் இருப்பதுடன் காலத்தின் தேவையாக அந்தப் பொறுப்புக்களை மனட்சாட்சிக்கு அமைய மக்களுக்காக நிறைவேற்றுவேன்.

மக்களுக்கு தன்னால் நிறைவேற்றவேண்டிய கடமைகளை உரியமுறையில் நிறைவேற்றுதல், அரசியல்வாதிகளின் பொறுப்பாகும்.

மக்கள் பணிக்காக மஹிந்த அமரவீரவின் அர்ப்பணிப்பை பாராட்டுகின்றேன்.

அவரது எதிர்காலப் பயணத்திற்கு எனது நல்வாழ்த்துக்களை தெரிவிக்கின்றேன்.

பாரிய அபிவிருத்தி செயற்திட்டங்கள் மற்றும் சிறந்த நோக்குத் தொடர்பில் பேசுவதற்கு முன்னர் தனது காலடியிலுள்ள பிரச்சனைகளை இனம்கண்டு நடவடிக்கைகளை எடுப்பது அரசியல்வாதியின் பொறுப்பாகும்.

அவர்கள், மக்கள் மத்தியில் சென்று அவர்களது அன்றாட வாழ்க்கைப் பிரச்சனைகளை ஆராய்ந்துபார்த்து அவற்றுக்கு தீர்வு வழங்குதல் அனைத்து மக்கள் பிரதிநிதிகளினதும் பொறுப்பாகும்.

இன்று நிலவும் வறட்சியான காலநிலையினால் இலட்சக்கணக்கான மக்கள் குடிநீர் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அரசியல்வாதிகள் தமது பிரதேச கிராமங்களுக்குச் சென்று அந்த மக்களின் தேவைகளை ஆராய்ந்து பார்க்கவேண்டும்.

என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.