ஐ.நா அறிக்கையாளர் யாழ்ப்பாணத்தில்

364 0

mqdefaultஐக்கிய நாடுகளின் சிறுபான்மையினருக்கான விசேட அறிக்கையாளர் இசாக் றிட்டா இன்று யாழ்ப்பாணத்திற்கான விஜயம் ஒன்றை மேற்கொண்டார்.

இதன்போது அவர் வடக்கு மாகாண சபையின் பிரதிநிதிகளை சந்தித்து கலந்துரையாடல்களை மேற்கொண்டார்.

யாழ்ப்பாணம்  கைதடியிலுள்ள முதலமைச்சர் அலுவலகத்திற்கு விஜயம் செய்த ஐக்கிய நாடுகளின் சிறுபான்மையினருக்கான விசேட அறிக்கையாளர்,  மாகாண கல்வி அமைச்சர் த.குருகுலராஜா மற்றும் மாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் ஆகியோரை சந்த்தித்து கலந்துரையாடினார்.