தற்கொலைத் தாக்குதலினால் ஏற்பட்ட அதிர்ச்சியில் பாதிக்கப்பட்டவர்களுக்கு விசேட உளநல சேவை !

400 0

உயிர்த்த ஞாயிறு தினத்தன்று நடைப்பெற்ற தொடர் குண்டுத்தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் வகையில் உளவள சேவையை வழங்குவதற்கான ஏற்பாடுகளை அரசாங்கம் மேற்கொண்டுள்ளது.  இலங்கை உள மருத்துவ சபையானது  இந்த சேவையை முன்னெடுத்து வருகின்றது. 

இதன் முதற்கட்டமாக உதவி தேவைப்படுகின்ற பாதிக்கப்பட்டவர்களுக்கு மனிதாபிமான ஆதரவு வழங்கும் செயற்பாடான  உளவியல் முதலுதவி வழங்கப்படுகின்றது . 

இது சரியான முறையில் பராமரிப்பு, ஆதரவு, பாதுகாப்பையும் வழங்குவதுடன் தனிநபரது கருத்துக்களையும் ஆராய்ந்து பாதிக்கப்ட்டவர்களை கூர்ந்து செவிமடுத்து அவர்களுக்கு விருப்பத்திற்கிணங்க தெரிவக்க இடமளித்தல்  இந்த திட்டத்தின்  சாராம்சமாகும் .

இவ்வாரான ஆதரவுகள் வழங்கப்படுகின்ற போதிலும் அவர்களுக்கு ஏற்பட்டுள்ள இழப்பின் அளவை கருத்தில் கொள்கையில் கூடிய ஆதரவும் வழிநடத்தலும் தேவைப்படுபவர்கள் கட்டாயமாக ஒரு மனோதத்துவ நிபுணரின் ஆலோசனையை பெறவேண்டும். 

நாட்டின் அனைத்து அரச வைத்தியசாலைகளிலும் தற்போது மனோதத்துவ நிபுணர்கள் உள்ளனர். அவர்கள் அனைவரும் ஆலோசனை வழங்க தயாராக உள்ளனர் அத்துடன் இலங்கை தேசிய வைத்தியசாலை, நீர்கொழும்பு பொது வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவிலும் இந்த சேவை முன்னெடுக்கப்படுகின்றது. 

அவசர உளநல உதவி மற்றும் வழிகாட்டல் வழங்கும் முகமாக 1926 என்ற இலக்கத்திற்கு அழைப்பை ஏற்படுத்தி 24 மணிநேர சேவையை தேசிய மனநல நிறுவகத்திடம் இருந்து பெற்றுக்கொள்ள முடியும்.