நாட்டில் ஏற்பட்டுள்ள அவசரகால நிலைமையினை கருத்திற் கொண்டு மஸ்கெலியா நகரில் இன்று காலை படையினரால் அதிரடி சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மஸ்கெலிய பஸ் தரிப்பிடம், ஆலயம், பள்ளிவாசல், கத்தோலிக்க தேவாலயம், பௌத்த விகாரைகள் மற்றும் பாடசாலைகள் உள்ளிட்ட இடங்களில் இந்த சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
மஸ்கெலிய பொலிஸார், அதிரடிப் படையினர் மற்றும் லக்ஷபான இராணுவ முகாமை சேர்ந்த இராணுவத்தினர் அடங்களாக 68 பேர் இந்த சோதனை நடவடிக்கையினை மேற்கொண்டனர்.
அத்துடன் இதன்போது சந்தேகத்தின் பேரில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் போதைபொருள் வைத்திருந்த குற்றத்திற்காக ஒருவரும கைதுசெய்யப்பட்டுள்ளார்.


