கடந்த 21ஆம் திகதி இலங்கையில் நடத்தப்பட்ட தீவிரவாதத் தாக்குதலில் உயிரிழந்தவர்கள் எமது இஸ்லாம் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் இல்லையெனத் தெரிவித்த, அகில இலங்கை ஜம் இய்யத்துல் உலமா சபையின் தலைவர் ஆஷிக் ரிஸ்வி, உயிரிழந்தவர்களின் சடலங்களை நாம் ஒரு போதும் பொறுப்பேற்க மாட்டோம் என்றும் தெரிவித்தார்.
அகில இலங்கை ஜம் இய்யத்துல் உலமா தலைமையகத்தில் இன்று (25) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்துத் தெரிவித்தப் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.


