சிறையிலுள்ள புலனாய்வுத் துறை அதிகாரிகளை உடன் விடுதலை செய்க- அஸ்கிரிய பீடம்

279 0

நாட்டில் எழுந்துள்ள அசாதாரண சூழலைக் கருத்தில் கொண்டு தேசிய தேவை கருதி ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ள புலனாய்வுத் துறை அதிகாரிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கி அவர்களை விடுவிக்க உடன் நடவடிக்கை எடுக்குமாறு  அஸ்கிரிய பீட சங்க சபை அரசாங்கத்திடம் விசேட வேண்டுகோள் விடுத்துள்ளது.

இந்த சூழ்நிலையில் எதிர்க் கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஸவும், முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகாவும் தாம் பெற்றுள்ள அனுபவத்தைக் கொண்டு செயற்படும் விதம் பாராட்டுக்குரிய எனவும் அச்சபை குறிப்பிட்டுள்ளது.

இன்று நாட்டில் பயங்கரவாதம் மீண்டும் தலைதூக்க பிரதான காரணம் இந்த அரசாங்கம் புலனாய்வுத் துறை அதிகாரிகள் பலரை சிறைப்படுத்தியுள்ளமை என்பது தெளிவுபடுத்தத் தேவையில்லாத ஒன்றாகும்.

மாவனல்லையில் சிலை உடைப்பு தொடர்பில் கைது செய்யப்பட்டவர்களை அரசியல் தலையீட்டினால் விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்க ஒன்றாகும் எனவும் அச்சபை மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.