ஆப்கானிஸ்தானில் வழிபாட்டு தலத்துக்குள் புகுந்து தீவிரவாதிகள் துப்பாக்கிச்சூடு

320 0

201610121047261128_attack-on-shiite-shrine-kills-14-in-afghanistan_secvpfஆப்கானிஸ்தானில் வழிபாட்டு தலத்துக்குள் புகுந்த தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுட்டதில் 14 பேர் பலியாகினர். 36 பேர் காயம் அடைந்தனர்.ஆப்கானிஸ்தானில் நேற்று மொகரம் பண்டிகையையொட்டி தலைநகர் காபூலில் பல்கலைக்கழகம் அருகேயுள்ள கர்தே சகி வழிபாட்டு தலத்தில் ஷியா பிரிவினர் கூடியிருந்தனர்.

அப்போது வழிபாட்டு தலத்துக்குள் புகுந்த தீவிரவாதிகள் கூட்டத்தினர் மீது திடீரென சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர்.மேலும் கையெறி குண்டுகளும் வீசப்பட்டன. இதனால் அங்கிருந்த பொதுமக்கள் அலறியடித்தபடி ஓட்டம் பிடித்தனர். எனவே அங்கு பதட்டமும் பரபரப்பும் ஏற்பட்டது. உடனே போலீசாரும், ராணுவ வீரர்களும் அங்கு விரைந்தனர்.

இத்தாக்குதலில் 14 பேர் சம்பவ இடத்தில் பலியாகினர். அவர்களில் ஒருவர் போலீஸ் அதிகாரி. மேலும் 36 பேர் காயம் அடைந்தனர்.இத்தாக்குதலுக்கு எந்த தீவிரவாத அமைப்பும் பொறுப்பு ஏற்கவில்லை. இதற்கிடையே ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கனி தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். இது மனிதாபிமான மற்ற செயல் என கூறியுள்ளார்.