சட்டம் ஒழுங்கு அமைச்சை பொன்சேகா அல்லது சம்பிக்கவுக்கு வழங்குங்கள் – திகாம்­பரம்

252 0

சட்டம் ஒழுங்கு அமைச்சை சரத் பொன்­சே­கா­வுக்கோ சம்­பிக்க ரணவக்­க­வுக்கோ வழங்கி தேசிய பாது­காப்பை உறு­திப்­ப­டுத்த நடவ­டிக்கை எடுக்­க­வேண்டும் என அமைச்சர் பழனி திகாம்­பரம் தெரி­வித்தார்.

பாரா­ளு­மன்­றத்தில் நேற்று இடம்­பெற்ற அவ­ச­ர­கால சட்ட ஒழுங்கு விதிகள் மீதான விவா­தத்தில் கலந்­து­கொண்டு உரையாற்றுகையிலேயே இவ்­வாறு குறிப்­பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரி­விக்­கையில், 

விடு­த­லைப்­புலி அமைப்பு படிக்­காத இளை­ஞர்­களை பயன்படுத்தியே குண்­டுத்­தாக்­கு­தல்­களை மேற்­கொண்­டது. ஆனால் இப்­போது படித்த, பணம் படைத்­த­வர்­களை பயன்படுத்திக்கொண்டே தாக்­குதல் நடத்­தப்­பட்­டி­ருக்­கின்­றது. இது ஆபத்­தா­ன­தாகும். அதனால் ஒரு­வரை ஒருவர் குற்­றம்­சாட்டி பயனில்லை. ஒரு­வ­ருக்­கொ­ருவர் விரல் நீட்­டாமல் இணைந்து செயற்­ப­டு­வதன் மூலமே இதற்கு முகம்­கொ­டுக்க முடியும்.

அர­சாங்கம் என்ற வகையில் இதற்­கான பொறுப்பை ஏற்க வேண்டும். இந்­திய  புல­னாய்வுத் தகவல் 4 ஆம் திகதி கிடைக்கப்பெற்றுள்­ளது. இந்­நி­லையில் எமக்கு தெரி­யாது என கூற முடி­யாது. நாட்டின் தலை­வ­ரான ஜனா­தி­ப­தியும் தெரி­யாது என்கின்றார். 

அப்­ப­டி­யென்றால் யாருக்கு இந்த தகவல் சென்­றது என்ற பிரச்சினை இருக்­கின்­றது. பொலிஸ் மா அதி­ப­ருக்கும் பாது­காப்பு செய­லா­ள­ருக்கும் அந்த தகவல் சென்­றுள்­ள­தா­கவே கூறப்படுகின்றது. எவ்­வா­றா­யினும் தாக்­குதல் சம்­ப­வத்தில் 350 பேர் வரையில் உயி­ரி­ழந்­துள்­ளனர். 

அத்­துடன் மலை­யக மக்கள் ஒரு­போதும் பயங்­க­ர­வா­தத்­துக்கு ஆதரவ­ளித்­த­தில்லை. நானும் ஒரு­போதும் பயங்­க­ர­வா­தத்­துக்கு ஆத­ர­வ­ளித்­த­தில்லை. அதனால் சட்டம் ஒழுங்கு தொடர்பில் நடவடிக்கை எடுக்க இந்த பக்­கத்தில் திற­மை­யா­ன­வர்கள் இருக்கின்­றனர். 

சட்டம் ஒழுங்கு அமைச்சுப் பதவியை  சரத் பொன்சேகாவுக்கோ அல்லது பாட்டலி சம்பிக்க ரணவக்கவுக்கோ வழங்க வேண்டும். இந்த நேரத்தில் சகலரும் ஒன்றிணைந்து செயற்படுவதன் மூலம் பயங்கரவாதத்தை ஒழிக்க முடியும் என்றார்.Share