ஆயுதப்படைகளுக்கு அழைப்பு விடுவிப்பு!

276 0

முப்படைகளின் பிரதானியான ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவினால் பொது பாதுகாப்பு பிரிவு ஒழுங்குமுறை சட்டம் 12 இன் கீழ் 22.04.2019 ஆம் திகதி 2120//4 மற்றும் 2120/5 வர்த்தமானியில்முப்படையினர் மற்றும் பொலிஸாருக்கு சந்தேக நபர்கள் கைது செய்வது, தேடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்வதற்கான அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன.

இதன் பிரகாரம் ஒழுங்குமுறை 20 (1) இன் கீழ் ஆயுத படையினருக்கு எந்த நபர்களையும் வேண்டிய நேரத்தில் அவசர நீதி கட்டுப்பாட்டின் கீழ் வாகனத்தை பரிசீலனை செய்யவும், கைது செய்து தடுத்து வைப்பதற்கான அதிகாரமும் பாதுகாப்பு படையினருக்கு வழங்கப்பட்டுள்ளது.

இதேபோல் ஒழுங்குமுறை 20 (2) இன் கீழ் பாதுகாப்பு படையினர் மூலம் தடுத்து வைக்கப்பட்டுள்ள எந்தவொரு நபரும் இருபத்தி நான்கு மணித்தியாலங்களுக்குள் அருகில் இருக்கும் பொலிஸ் நிலையத்திற்கு கட்டாயமாக ஒப்படைக்கப்பட வேண்டும். 

இந்த ஒழுங்குமுறையின் (1) பத்திரத்தின் கீழ் எந்த நபரும் வளாகத்தினிளோ, வாகனத்திலோ, கப்பலிலோ தேடுதல் செய்வதற்கான அதிகாரங்கள் பாதுகாப்பு படையினருக்கு வழங்கப்பட்டுள்ளன.

அதன்படி, ஒழுங்குமுறை 24 இன் படி, இலங்கை இராணுவம், கடற்படை ,விமானப்படை மற்றும் பொலிஸாருக்கு சிறைச்சாலை கட்டளைச் சட்டம் 77 (5) இன் கீழ்இந்த உத்தியோகபூர்வ அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன.