ஹட்டன் காமினிபுர பகுதியில் வீடு ஒன்றில் இருந்து 2000ம் மில்லிகிராம் ஹெரோயின் போதை பொருளுடன் ஒருவர் கைது செய்யபட்டுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த கைது சம்பவம் நேற்று வெள்ளிகிழமை மாலை 05 மணி அளவில் இடம்பெற்றுள்ளது.
ஹட்டன் பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் ஹட்டன் பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது குறித்த சந்தேக நபரிடம் இருந்து 2000ம் மில்லிகிராம் ஹெரோயின் மீட்கப்பட்டுள்ளதோடு விற்பனைக்காக மேற்படி போதைப்பொருள் வைக்கபட்டிருந்தாகவும் தெரியவந்துள்ளது.
கைது செய்யபட்ட சந்தேகநபரை இன்று ஹட்டன் மாவட்ட நீதிமன்ற நீதவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்த உள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.


