மட்டக்களப்பு மாவட்டத்தின் வவுணதீவு பொலிஸ் பிரிவில் வடிசாராயம் அருந்திய நபர் ஒருவர் மரணடைந்துள்ளார்.
இலுப்படிச்சேனை, முன்மாரி எனும் கிராமத்தில் தற்காலிகமாக வசித்து வந்த சொத்தியாபுலையைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் 50 வயதுடைய தந்தையே இவ்வாறு நேற்று பகல் உயிரிழந்துள்ளார்
குறித்த நபர் தனது வீட்டின் முன்னுள்ள வீதியோரமாக மரணமடைந்து கிடந்ததாகவும், அவர் அன்றைய தினம் முழுவதும் மது போதையில் இருந்ததாகவும் உறவினர்கள் தெரிவித்தனர்.
அண்மைக் காலமாக இப் பிரதேசத்தில் வடி சாராயம் பாவனை அதிகரித்து காணப்படுவதாகவும் இதனை கட்டுப்படுத்த உரிய அதிகாரிகள் கூடிய கவனம் செலுத்த வேண்டும் எனவும் பிரதேச மக்கள் சுட்டிக் காட்டினர்.
இவரது மரணம் தொடர்பில் வவுணதீவு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


