கம்பஹா – விகொட சனச சங்கத்தின் வாடிக்கையாளர்களின் வைப்புப் பணத்தில் சுமார் 100 கோடி ரூபா வரை நிதி மோசடி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படும் விவகாரம் தொடர்பில், அச்சங்கத்தின் தலைவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த நிதி மோசடி தொடர்பில் கம்பஹா – விகொட சனச சங்கத்தின் தலைவரை சி.ஐ.டி. தேடி வந்த நிலையில், இன்று அவர் கம்பஹா பொலிஸாரால், கம்பஹா குடியிருப்பு தொகுதியின் வாகன தரிப்பிடத்தில் வைத்து கைத்யு செய்யப்பட்டார்.
பொலிஸாரிடமிருந்து குறித்த சங்கத்தின் தலைவர் தலைமறைவாக இருந்து வந்த நிலையில், கம்பஹா சமூக பொலிஸ் பீர்வு உருப்பினர் ஒருவர் கொடுத்த தகவலுக்கு அமைய இவ்வாறு பொலிஸாரால் கைது செய்யப்ப்ட்டதாக கம்பஹா மாவட்டத்துக்கு பொறுப்பான உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
சந்தேக நபர் கம்பஹா சனச சங்கத்தின் வாடிக்கையாளர்கள் 5000 பேருக்கும் அதிகமானோருக்கு சொந்தமான பணத்தை மோசடி செய்துள்ளதாக, கம்பஹா மாவட்ட கூட்டுறவு ஆணையாளரினால் சி.ஐ.டி.க்கு முறைப்பாடளிக்கப்பட்டிருந்தது. அதன்படியே சந்தேக நபரைக் கைது செய்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


