கராபிட்டிய போதனா வைத்தியசாலையில் கட்டடம் ஒன்றில் இருந்து கீழே பாய்ந்து நபரொருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
குறித்த வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்று வந்த நோயாளி ஒருவரே இன்று அதிகாலை வைத்தியசாலை கட்டடமொன்றின் மூன்றாவது மாடியில் இருந்து கீழே பாய்ந்து இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்துள்ளவர் வெலிகம – தெனிபிட்டிய பகுதியை சேர்ந்த 52 வயதான நபர் என தெரியவந்துள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.


