
ஜா-எல, துடெல்ல பிரதேசத்தில் மோட்டார் சைக்கிள் ஒன்று புகையிரதத்துடன் மோதி ஏற்பட்ட விபத்தில் ஒருவர் பலியாகியுள்ளார்.
ஜாஎல, துடெல்ல புகையிரத வீதியில் நேற்று மாலை இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
புகையிரத வீதியின் குறுக்காக பயணித்த மோட்டார் சைக்கிள் சிலாபத்தில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கி வந்த புகையிரதத்துடன் மோதியுள்ளது.
ஜாஎல, துடெல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 43 வயதுடைய ஒருவரே விபத்தில் பலியாகியுள்ளார்.
புகையிரத வீதிக்கு பாதுகாப்பு கடவை இல்லாமையே விபத்துக்கு காரணம் என்று பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

