
குருந்துகஹ- ஹெதப்ம பகுதியில் வாகன திருத்தும் நிலையம் ஒன்றிலிருந்து 3 கிலோ 600 கிராம் ஹெரோயின் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது.
பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவு நேற்று இரவு மேற்கொண்ட விசேட சோதனை நடவடிக்கையின் போதே குறித்த போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.
கைப்பற்றப்பட்டுள்ள போதைப்பொருளின் பெறுமதி சுமார் 35 மில்லியன் ரூபா என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

