பானந்துறை – இரத்தினபுரி வீதியின் மானான பகுதியில் இடம்பெற்ற விபத்தில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் ஒருவர் காயமடைந்துள்ளார்.
மோட்டார் சைக்கிள் ஒன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கரவண்டி ஒன்றுடன் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் பலத்த காயமடைந்த நபர் இங்கிரிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
பானந்துறை பகுதியை சேர்ந்த 24 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
விபத்தில் பலத்த காயங்களுக்குள்ளான மற்றுமொரு நபர் மேலதிக சிகிச்சைகளுக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.


