வைத்தியர் போன்று வேடமிட்ட யுவதி கைது

253 0

எல்பிட்டிய ஆதார வைத்தியசாலையில் வைத்தியர் போன்று வேடமிட்டு சுற்றித் திரிந்த யுவதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

குறித்த யுவதி வைத்தியசாலையில் வைத்தியர் போன்று வேடமிட்டு நோயளர்களுடன் இணைந்து இருப்பதாக கிடைத்த தகவலுக்கமைய கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

காலி-பிலான பிரதேசத்தைச் சேர்ந்த 24 வயதுடைய யுவதி ஒருவரே  இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். 

 குறித்த யுவதி எல்பிட்டிய நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.