கம்பெரலிய – என்டபிரைஸ் ஸ்ரீ லங்கா ஒன்றிணைத்து அபிவிருத்தி செயற்திட்டங்களை முன்னெடுக்கத் தீர்மானம்

266 0

கிராமபுற அபிவிருத்திக்கென அரசாங்கத்தினால் அறிமுகப்படுத்தப்பட்ட கம்பெரலிய வேலைத்திட்டத்திற்கான பயனாளிகளின்  எண்ணிக்கை அதிகரித்துள்ளது. 

இந்நிலையில் கம்பெரலிய வேலைத்திட்டத்துடன் இணைந்த வகையில் என்டபிரைஸ் ஸ்ரீ லங்கா வேலைத்திட்டத்தையும் நடைமுறைப்படுத்த எதிர்பார்த்துள்ளதாக தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் நிரோஷன் பெரேரா தெரிவித்தார்.

கம்பெரலிய வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கென கடந்த பெப்ரவரி மாதம் அமைச்சர் சாகல ரத்னாயக்க தலைமையில் இராஜாங்க அமைச்சர் நிரோஷன் பெரேரா உள்ளிட்ட ஐவர் குழுவொன்றை பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும். 

இந்நிலையில் கம்பெரலிய வேலைத்திட்டத்தின் தற்போதைய போக்குகள் தொடர்பில் விளக்கமளிக்கும் போதே பெரேரா இதனை குறிப்பிட்டார்.