ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி மற்றும் ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின் கூட்டணியை கலைப்பதற்கான அவசியம் ஐக்கிய தேசிய கட்சிக்கு கிடையாது. சுதந்திர கடசியின் மஹிந்தவுடனான கூட்டணி வெற்றியடைய போவதுமில்லை. கூட்டணியினால் எங்களின் அரசாங்கத்துக்கு எவ்வித சவாலும் ஏற்பட போவதில்லை என ஐக்கிய தேசிய கட்சி அறிவித்துள்ளது.
சுதந்திர கட்சி மற்றும் பொதுஜன முன்னணியுடனான கூட்டணி தொடர்பில் ஐக்கிய தேசிய கட்சியின் நிலைபாடு தொடர்பில் வினவியபோதே அந்த கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஆசு மாரசிங்க இவ்வாறு குறிப்பிட்டார்.
இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,
சுதந்திர கட்சி பொதுஜன முன்னணியுடன் கூட்டணி அமைப்பதால் ஐக்கிய தேசிய கட்சியின் செயற்பாடுகளுக்கு எவ்வித சவாலும் ஏற்பட போவதில்லை. அவர்களின் கூட்டணிக்கு எதிராக சூழ்ச்சி செய்வதற்கான அவசியமும் எமக்கு இல்லை.
தேசிய அரசாங்கத்திலிருந்து சுதந்திரக்கட்சி விலகிச் சென்றதிலிருந்து ஐக்கிய தேசிய கட்சி சுயாதீனமாகவே செயற்பட்டு வருகின்றது. சுதந்திர கட்சியின் பங்குப்பற்றல் இல்லாமல் அரசாங்கம் வெற்றிகரமாக பயணதித்து வருகின்றது.
ஆகவே எதிர்காலத்தில் சுதந்திரக் கட்சி மஹிந்த அணியினருடன் கைகோர்த்தாலும் அந்த கூட்டணியினால் எங்களின் அரசாங்கத்துக்கு பாதிப்பு ஏற்படாது. எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலும் எங்களுக்கு சாதமாகவே அமையும்.
அவர்களின் செயற்பாடுகளில் நாங்கள் தனிப்பட்ட ரீதியில் தலையிடப்போவதுமில்லை. ஆனால் அவர்களின் கூட்டணி வெற்றியடையுமென்ற நம்பிக்கையும் எமக்கு கிடையாது. எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலின் பொதுஜன முன்னணியினை கூட்டணியை விட பலமான கூட்டணயொன்றை ஐக்கிய தேசிய முன்னணி அமைக்கும். ஏதிர்காலத்தில் ஐக்கிய தேசிய கட்சி தலைமையில் உருவாகவுள்ள முன்னணி பொதுஜன முன்னணிக்கு சவாலாக அமையும்.


