
யாழ்ப்பாணம் உடுவில் பிரதேச செயலகத்துக்குட்பட்ட குப்பிளான் தெற்கில், மின்னல் தாக்கத்துக்கு உள்ளாகி, மூன்று பேர் மரணமடைந்துள்ளனர் எனப் பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் (16) பிற்பகல் 2:30 மணியவில் இடம்பெற்றுள்ளது என சுன்னாகம் பொலிஸார் தெரிவித்தனர்.
தமது புகையிலைத் தோட்டம் ஒன்றில் நான்குபேர், வேலை செய்துகொண்டிருந்துள்ளனர். இதன்போது, மதிய உணவு எடுப்பதற்காக ஒருவர் வீட்டுக்குச் சென்றுள்ளார். இதன்போதே இவ்வனர்த்தம் ஏற்பட்டுள்ளது.

