விருத்தாசலம் அருகே ஆட்டோவில் கடத்தப்பட்ட 12 மூட்டை குட்கா பறிமுதல்!

11 0

விருத்தாசலம் அருகே வாகன சோதனையில் ஆட்டோவில் கடத்தப்பட்ட 12 மூட்டை குட்கா பறிமுதல் செய்யப்பட்டது. 

விருத்தாசலம் அடுத்த எடக்குப்பம் பகுதியில் தேர்தல் நிலையான கண்காணிப்புக்குழு அதிகாரி லெனின் தலைமையினான குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். 

அப்போது அப்பகுதி வழியாக வந்த ஒரு ஆட்டோவை சோதனை செய்தபோது அதில் 12 மூட்டைகள் தடை செய்யப்பட்ட குட்கா கடத்தி வந்தது தெரியவந்தது. அப்போது ஆட்டோவில் வந்த 2 பேர் அங்கிருந்து தப்பி ஓடினர். உடன் லெனின் தலைமையிலான அதிகாரிகள் அந்த ஆட்டோவை குட்கா மூட்டைகளுடன் பறிமுதல் செய்து விருத்தாசலம் தாலுகா அலுவலகத்துக்கு கொண்டு சென்றனர். தாசில்தார் கவியரசு அதிகாரி லெனினிடம் காவல் நிலையத்தில் ஒப்படைக்க உத்தரவிட்டார்.

உடன் விருத்தாசலம் போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். ஆனால் விருத்தாசலம் போலீசார் பறிமுதல் செய்த இடம் விருத்தாசலம் போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட எல்லைப் பகுதிக்கு அப்பாற்பட்ட இடம் எனக் கூறினார்கள். இதனால் நிலையான கண்காணிப்புக்குழு ஆலடி காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு போலீசாரிடம் ஒப்படைத்தனர். போலீசார் வாகனத்தை ஓட்டி வந்த டிரைவர் விளாங்காட்டூர் தாமோதரனை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் தப்பி ஓடிய 2 பேரை வலை வீசி தேடி வருகின்றனர்.

Related Post

விபத்தில் சிக்கியவர் கணவர் என தெரியாமல் சிகிச்சை அளித்த செவிலியர்

Posted by - September 24, 2018 0
சேலம் மாவட்ட ஓமலூர் அரசு மருத்துவமனையில் விபத்தில் சிக்கியவர் கணவர் என தெரியாமல் சிகிச்சை அளித்த செவிலியர், நோயாளியின் மோதிரத்தை வைத்து அது தன் கணவர் என…

இராக்கில் 39 இந்தியர்கள் கொல்லப்பட்டதற்கு ஆதாரம் இல்லை –  சுஷ்மா 

Posted by - July 27, 2017 0
இராக்கின் மொசூல் நகரிலிருந்து கடத்திச் செல்லப்பட்ட 39 இந்தியர்கள் கொல்லப்பட்டிருக்கலாம் என்பதற்கு உறுதியான ஆதாரம் எதுவும் இல்லை என்று வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்துள்ளார். மொசூல்…

முதல் அமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நிலை பற்றிய அறிக்கையினை வெளியிட்டது அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம்

Posted by - December 4, 2016 0
முதல் அமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நிலை பற்றிய அறிக்கையினை அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ளது.  அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என மருத்துவமனை நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

கோவை, சென்னை மாநகராட்சிகளில் டெண்டர் வழங்கியதில் பல கோடி ரூபாய் முறைகேடு

Posted by - January 5, 2019 0
கோவை, சென்னை மாநகராட்சிகளில் டெண்டர் வழங்கியதில் பல கோடி ரூபாய் முறைகேடு நடந்துள்ளதாக கூறி தொடரப்பட்ட வழக்கிற்கு பதில் அளிக்கும்படி உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு நோட்டீஸ் அனுப்ப…

மருத்துவர்கள் வேலைநிறுத்தப் போராட்டம் வாபஸ்

Posted by - May 5, 2017 0
நீதிமன்ற உத்தரவு எதிரொலியால் மருத்துவர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தை வாபஸ் பெறுவதாக அரசு மருத்துவ சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.