மானிப்பாயில் ஆவா குழுவைச் சேர்ந்த 8 பேர் கைது

13 0

ஆவா குழுவைச் சேர்ந்தவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில், 8 பேரை மானிப்பாய் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

மானிப்பாய், உடுவில் ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்களையே பொலிஸார் இன்று கைது செய்துள்ளனர்.

குறித்த பகுதியில்  திடீர் சோதனை நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டபோது இவர்கள்  கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த காலங்களில் மானிப்பாய் பகுதியில் தொடர்ச்சியாக இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவங்களுடன் தொடர்புடையோர் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடம் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன் அவர்களை யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கான ஏற்பாடுகளையும் மானிப்பாய் பொலிஸார் முன்னெடுத்துள்ளதாக கூறப்படுகின்றது.

Related Post

ஹர்த்தாலுக்கு இலங்கை போக்குவரத்து சபையின் வவுனியா சாலை தொழிற்சங்கம் ஆதரவு!

Posted by - April 26, 2017 0
வடக்கு, கிழக்கு மாகாணத்தில் எதிர்வரும் 27ஆம் திகதி முன்னெடுக்கவுள்ள ஹர்தாலுக்கு இலங்கை போக்குவரத்து சபையின் வவுனியா சாலை தொழிற்சங்கம் தனது ஆதரவினை வழங்கியுள்ளது.

வவுனியாவில் உண்ணாவிரதம் இருந்த தாயார் ஒருவரின் உடல்நிலை பாதிப்பு குறித்து கவனம் செலுத்தவும். (இவரது இரண்டு பிள்ளைகள் காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர்.)

Posted by - February 24, 2017 0
காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம் தமிழ் மக்களை பொறுத்தவரையில் ஒரு தேசியப்பிரச்சினை ஆகும். ஆதலால், காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் தொடர்பில் பொறுப்புக்கூறுமாறு சிறீலங்கை அரசை வலியுறுத்தி, தமிழர் தாயகத்தில்…

முல்லைத்தீவு மல்லாவி மத்திய கல்லூரி மாணவிகளுக்கான நவீன விடுதி(காணொளி)

Posted by - March 20, 2017 0
  முல்லைத்தீவு மல்லாவி மத்திய கல்லூரி மாணவிகளுக்கான நவீன விடுதி நேற்று கையளிக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு மல்லாவி மத்திய கல்லூரி மாணவிகளின் நலன் கருதி, 30 மில்லியன் ரூபாவில்…

தமிழக மீனவர்கள் 27 பேருக்கும் மீண்டும் விளக்கமறியல்

Posted by - August 16, 2018 0
இலங்கை கடற்படையினரால் கைதுசெய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 27 பேரையும் மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்றுறை நீதிமன்ற நீதிபதி சபேஷன் உத்தரவிட்டுள்ளார். இராமநாதபுரம் மற்றும் தஞ்சாவூர் பகுதிளைச் சேர்ந்த…

பொது இடங்களில் வெடி கொளுத்துவது தவறாகும் – யாழ் நீதிமன்ற நீதிவான்

Posted by - February 15, 2019 0
பொது இடத்தில், வீதிகளில் வெடி கொளுத்துவது தவறாகும். இறுதி  ஊர்வலமாக இருந்தாலும் சரி வெடிகொளுத்தும் போது பொதுநலனைக் கருத்தில் எடுக்கவேண்டும். வீதியில் பயணிப்பவர்களுக்கு இடையூறாக வெடிகொளுத்துவதை ஏற்க…