கண்டி பதுளை வீதியில் பாரிய குகை

403 0
b2ae1c9a8d0e3b0552f901f4c095f8e9_xlகண்டி – பதுளை ரஜமாவத்தை வீதியில்  நீர் விநியோக வசதிகளுக்காக மேற்கொள்ளப்பட் அகழ்வு பணிகளின் போது குகை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கண்டி ரஜமாவத்தையில் உள்ள கந்தே சந்தி கெப்பிட்டியாவ பிரதேசத்தில் 30 அடி ஆழமான இந்த குகை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த குகைக்குள் செல்லக்கூடிய வகையில் இரண்டு பாதைகள் அமைந்ததுள்ளன.
குறித்த இந்த குகையை புவிசரிதவியல் மற்றும் சுரங்கப் பணியத்தை சேர்ந்த அதிகாரிகள் மேலும் ஆராய்வதற்காக நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
ஒரு வழிப் பாதையில் எவ்வித சிரமமுமின்றி ஆயிரம் அடி தூரம் வரை செல்ல முடியும் என்றும் அதிக கூடிய வெப்பத்தின் காரணமாக மூச்சுவிடுவதில் உள்ள சிரமத்தினால் அதிக தூரம் செல்லமுடியாத நிலை காணப்படுவதாகவும்  இந்தப்பகுதிக்குச் சென்று பார்வையிட்டவர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.