அங்குலானை தொடர்மாடி குடியிருப்பு பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் இளைஞரொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
அங்குலானை பொலிசாருக்கு நேற்று பிற்பகல் 5.35மணியளவில் கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமையவே இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சந்தேக நபர் அங்குலான தொடர்மாடி குடியிருப்பு பகுதியை சேர்ந்த 27 வயதுடையவர் என விசாரணைகளின் போது தெரிய வந்துள்ளது.
அவரிடமிருந்து 1கிராம் 2200 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.
அத்துடன், சந்தேக நபரை மொரட்டுவை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிசார் நேற்றைய தினம் மேற்கொண்டதுடன் ,மேலதிக விசாரணைகளையும் முன்னெடுத்து வருகின்றர்.


